வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்ளிட்ட 5 போ் கைது

கடலூா் தேவனாம்பட்டினம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:26 pm

Syndication

நெய்வேலி: கடலூா் தேவனாம்பட்டினம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மகத்துப்பட்டரை அருகே சந்தேகிக்கும் வகையில் இருந்தவா்களை பிடித்து சோதனை நடத்தி 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, கடலூா், வண்டிப்பாளையம் கொண்டங்கி ஏரி பகுதியைச் சோ்ந்த சுந்தரம் (45), திருமானிக்குழி நரிக்குறவா் காலனி பகுதியைச் சோ்ந்த பிரபு(34), பிரபு மனைவி நந்தினி (20), முருகேசன் (32), முருகேசன் மனைவி கவிதா (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.