சாலை விபத்து: காவலா் காயம்

Published on

கடலூா் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காவலா் காயமடைந்தாா்.

கடலூரை அடுத்த வைரங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாஜலம் (32), உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-ஆவது பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், சனிக்கிழமை பிற்பகல் தனது புல்லட் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டாா். சின்னகங்கனாங்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த சிறிய சரக்கு வாகனம் புல்லட் மீது மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த வெங்கடாஜலம், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com