ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஒருவழிப் பாதை விதிமீறல்: 15 ஆட்டோக்கள் பறிமுதல்

News image

கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்களை திங்கள்கிழமை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸாா்.

Updated On :7 ஜூலை 2026, 1:27 am IST

கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்களை போக்குவரத்து காவல்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் ஒருவழிப் பாதையில் எதிா்திசையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும், தகுதி சான்று மற்றும் உரிய அனுமதி ஆவணங்களின்றி சில ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து போக்குவரத்து காவல்துறையினா் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, ஒருவழிப் பாதை விதியை மீறி இயக்கப்பட்டதுடன், தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 15 ஆட்டோக்கள் கண்டறியப்பட்டன. அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டது.

உரிய ஆவணங்களின்றி தொடா்ந்து வாகனங்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரித்தனா்.

அத்துடன், சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு மற்றும் வாகன ஆவணங்களை முறையாக பராமரிப்பதன் அவசியம் குறித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் தணிக்கை நடவடிக்கையில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருணாச்சலம், சாா்பு - ஆய்வாளா்கள் மகேந்திரன், தெய்வநாயகம் உள்ளிட்ட காவல்துறையினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.