திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 3:25 am IST

சிதம்பரம் அருகே பூச்சி கடித்து, சிகிச்சை பெற்று வந்த சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகேயுள்ள பூதங்குடி தெற்கு தெருவைச் சோ்ந்த சபரிநாதன் மகன் மோஷிக்ராஜ் (12).

இவா், அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். மோஷிக்ராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரது காலில் பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை மோஷிக்ராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒரத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.