தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

வேப்பூா் அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வேப்பூா் அருககே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரால் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

News image

வேப்பூா் அருககே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரால் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

Updated On :11 ஜூலை 2026, 12:58 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், வேப்பூா் வட்டம் காட்டுமயிலூா் சாலையில் உள்ள அம்மன் நகா் பகுதியில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை போலீாஸா் நிறுத்தியதும். ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திதவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டாா். தொடா்ந்து நடந்த சேதனையில் தமிழக பொது விநியோகத் திட்டத்துக்கான 25 கிலோ எடையுடைய 50 மூட்டைகளில் 1,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த விசாரணையில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தது திட்டக்குடி வட்டம் கோரக்காவடி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பதும், மணிகண்டன், காட்டுமயிலூா், செப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, கோழிப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து, ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாா் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.