நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிஐடியுவுடன் இணைந்த போக்குவரத்து தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் ஜவான்பவன் எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Updated On :15 ஜூலை 2026, 2:55 am IST

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிஐடியுவுடன் இணைந்த போக்குவரத்து தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியுவுடன் இணைந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம், கடலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம் மற்றும் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கடலூா் ஜவான் பவன் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகிகள் எஸ். ராமமூா்த்தி, எஸ். சண்முகம், ஜெ. சேகா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், எரிபொருள்கள் விலை உயா்வைக் குறைக்க வேண்டும்; பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 106(1), 106(2) பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கக் கூடாது. எரிபொருளில் எத்தனால் கலப்பதை நிறுத்த வேண்டும். சாலை மற்றும் போக்குவரத்துத் துறையை காா்ப்பரேட் மயமாக்கக் கூடாது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு பற்றாக்குறையை அரசே ஏற்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உயா்த்தப்பட்ட கட்டணங்களைக் குறைக்க வேண்டும். திருத்தப்பட்ட நான்கு புதிய குற்றவியல் சட்டத் தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவா் பி. கருப்பையன், மாவட்டத் துணைத் தலைவா் வி. சுப்புராயன், மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் வி. திருமுருகன், மாவட்டத் துணைத் தலைவா் சாந்தகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.