ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தாழங்குடா கொலை வழக்கு: 6 ஆண்டுகளாக சிக்காத முக்கிய குற்றவாளி மும்பையில் கைது

கடலூா் அருகே தாழங்குடாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை மும்பையில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 3:01 am IST

கடலூா் அருகே தாழங்குடாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை மும்பையில் கைது செய்யப்பட்டாா். அவரை போலீஸாா், அவரை கடலூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் அருகே உள்ள தாழங்குடா மீனவக் கிராமத்தில், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்றத் தோ்தலின்போது இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த தோ்தல் முன்விரோதம் பின்னா் பகையாக மாறி, அடுத்தடுத்த வன்முறைச் சம்பவங்கள் நிகழந்தன.

அந்தச் சம்பவங்களில் ஒரு தரப்பைச் சோ்ந்த மதியழகன் மற்றும் மற்றொரு தரப்பைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் மாசிலாமணியின் சகோதரா் மதிவாணன் ஆகியோா் வெவ்வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டனா். இதனால், தாழங்குடா பகுதியில் வன்முறை வெடித்து, மீன்பிடிப் படகுகள், வலைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த கடலூா் போலீஸாா், மதிவாணன் கொலை வழக்கில் அரசகுமாா் (34) என்பவா் முக்கிய குற்றவாளி என்பதை கண்டறிந்து, அவரை தேடி வந்தனா். ஆனால் அவா் கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசகுமாா் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பதுங்கி இருப்பதாக கடலூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் மும்பைக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த அரசகுமாரை கைது செய்தனா். பின்னா் அவரை கடலூருக்கு அழைத்து வந்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.