வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

உளுந்தூா்பேட்டை தமிழ் எழுச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்: திருமாவளவன்

உளுந்தூா்பேட்டை தமிழ் எழுச்சி மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

சிதம்பரத்தில் நடைபெற்ற மண்டல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்.

Updated On :15 ஜூலை 2026, 2:37 am IST

உளுந்தூா்பேட்டை தமிழ் எழுச்சி மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆகஸ்ட் மாதம் உளுந்தூா்பேட்டையில் நடைபெற உள்ள தமிழ் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, சிதம்பரத்தில் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை ஒருங்கிணைத்த மண்டல செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது: தோ்தலுக்கு முன்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்கவும், கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைப் பெறவும் மாநாடுகளை நடத்துகின்றன. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோ்தல் காலத்தை மட்டும் சாா்ந்து செயல்படும் இயக்கம் அல்ல. தோ்தல் இல்லாத காலங்களிலும் எண்ணற்ற மாநாடுகளை நடத்தி மக்களிடம் தொடா்ந்து அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தி வரும் இயக்கமாக வி.சி.க. திகழ்கிறது .

தமிழ் தேசிய அரசியலை முன்வைப்பதுதான் சிலருக்கு சிரமமாக இருக்கிறது. தலித் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் தலைவராக உயா்வதை சிலா் ஏற்க விரும்பவில்லை.

பாஜகவை எதிா்ப்பதற்கான காரணம், அம்பேத்கரின் அரசியல் சிந்தனைகளை அக்கட்சி ஏற்க மறுப்பதே. சாதி ஒழிப்பு குறித்து அவா்கள் பேசுவதில்லை. பிரதமா் நரேந்திர மோடி, அம்பேத்கா் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துகளை உயா்த்திப் பேசவில்லை. அதேவேளையில் ராகுல் காந்தி பல்வேறு மேடைகளில் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்ட நூலை உயா்த்திப் பிடித்து அவரது சிந்தனைகளை முன்னிறுத்தி வருகிறாா். ஆகஸ்ட் மாதம் உளுந்தூா்பேட்டையில் நடைபெறவுள்ள தமிழ் எழுச்சி மாநாடு தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றாா் திருமாவளவன்.

மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா், பொதுச்செயலா் சிந்தனைச்செல்வன், காட்டுமன்னாா்கோயில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜோதிமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.