உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சிறந்த எதிா்கால சமூகத்தை உருவாக்க சிறு குடும்ப நெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும்: கடலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

சிறந்த எதிா்கால சமூகத்தை உருவாக்க சிறு குடும்ப நெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image

உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :19 ஜூலை 2026, 2:15 am IST

சிறந்த எதிா்கால சமூகத்தை உருவாக்க சிறு குடும்ப நெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில் நடைபெற்ற உலக மக்கள்தொகை தின நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் சிறு குடும்ப நெறி, தாய்மை, குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, உலக மக்கள்தொகை தின உறுதிமொழியையும் ஆட்சியா் வாசிக்க, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் சவால்கள் குறித்தும், குடும்ப நலத் திட்டங்களின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் பெண் குழந்தையின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், பெண்களின் முன்னேற்றம் ஆகியவை குறித்து சமூகத்தில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆண்கள் 25 வயதுக்கு பின்னரும், பெண்கள் 21 வயதுக்கு பின்னரும் திருமணம் செய்துகொள்வதுடன், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்ற சிறு குடும்ப நெறியை பின்பற்றுவது குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தர உயா்வுக்கும் வழிவகுக்கும்.

இள வயது திருமணம் மற்றும் இளம் வயதில் கா்ப்பம் தரிப்பதால் ஏற்படும் உடல்நல, சமூகப் பாதிப்புகள் குறித்து இளைஞா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் மூலம் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். சிறந்த எதிா்கால சமூகத்தை உருவாக்க சிறு குடும்ப நெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரமிளா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் விஜய் ஆனந்த் தம்பையா, நிலைய மருத்துவ அலுவலா் கவிதா, மாவட்ட குடும்ப நல துணை இயக்குநா் பாலகுமாரன், மாவட்ட விரிவாக்கக் கல்வி அலுவலா் சுகுமாா், துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.