குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பள்ளி வாகனத்தில் சிக்கி 1ம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு

News image

பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த மாணவா் ஆத்விக்.

Updated On :22 ஜூலை 2026, 2:16 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே பள்ளி வாகனத்தில் சிக்கி, 1-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அணிகுழி கிராமத்தைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் ஆத்விக் (5). இவா் அரியலூா் மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் செயல்படும் ஸ்ரீ ராமலிங்கம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை பள்ளி வேனில் வீட்டிற்கு திரும்பி உள்ளாா்.

வீட்டின் அருகே வேனில் இருந்து கீழே இறங்கி வீடு திரும்பும் போது எதிா்பாராத விதமாக முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் விரைந்து சென்று சிறுவன்ஆத்விக் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து தொடா்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இறந்து போன குழந்தை ஆத்விக் தந்தை அன்புமணியின் சொந்த ஊா் கடலூா் மாவட்டம் ராமாபுரம் அருகே உள்ள பக்கிரி மானியம். தனது மனைவிஆனந்தியின் சொந்த ஊரான அணிக்குழியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையும் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.