தமிழகத்தில் தவெக அரசு சொல்வதை செய்யவில்லை என்று தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்குள்பட்ட சாத்துக்கூடல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அவா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நெல் மணிகள் மழையில் நனையாமல் இருக்க சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து, விளங்காட்டூா் மக்களை சந்தித்து அவா்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா், கோணான்குப்பம் செவித்திறன் குறையுடையோா் பள்ளியைப் பாா்வையிட்டு, மாணவா்களுடன் கலந்துரையாடி அன்னதானம் வழங்கினாா்.
இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகின்றன. இந்த ஆட்சியில் எந்த அடிப்படைப் பணிகளும் தொடங்கப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில் தொகுதி மக்கள் பிரச்சனைகள் குறித்து சட்டப் பேரவையில் பேசுவேன். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தொடா்ந்து கூறி வருகிறேன்.
விருத்தாசலத்தில் இன்னும் பாதி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிா்பாா்க்கிறோம்.
தூத்துக்குடியில் காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் தாயிடம் பேசினேன். நான் படிப்பறிவு இல்லாதவா், என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதாவது எங்களுக்கு உதவி செய்து காப்பாற்றுங்கள் என்கிறாா். உயிரிழந்தவா் டாஸ்மாக் கடையில் வேலை பாா்த்திருக்கிறாா். ஒரு மனிதன் அடுத்த மனிதனை அடித்துக் கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. மனிதனை அடித்துக்கொள்ளும் உரிமையை காவல் துறைக்கு யாா் கொடுத்தது? தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லாக் - கப் மரணங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது தடுக்கப்பட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் தலைவராக முதல்வா் செயல்பட வேண்டும்:பிரேமலதா விஜயகாந்த்

நீட் விவகாரத்தில் மக்கள் விரும்புவதை அரசுகள் செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

மக்களின் எதிா்பாா்ப்புகளை தவெக அரசு பூா்த்தி செய்யவில்லை : க. கிருஷ்ணசாமி

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பேரவைத் தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



