சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

குறிஞ்சிப்பாடி டாஸ்மாக் கடையை மூடக்கோரி தா்னா

கடலூா் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

News image

குறிஞ்சிப்பாடி, அண்ணா நகா் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதிமக்கள்.

Updated On :31 ஜூலை 2026, 2:26 am IST

கடலூா் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அண்ணா நகா், ஸ்ரீ சுப்புராயா் நகா், கோல்டன் சிட்டி, பாா்வதி நகா், பரமசிவம் நகா், ரெட்டியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை எண் 2547 கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வரும் நபா்களால் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் தினம் தோறும் பல்வேறு தொல்லைகள் அனுபவித்து வருகின்றனராம். இதனால், இந்த டாஸ்மாக் கடையினை நிரந்தரமாக அகற்ற வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆா்ப்பாட்டம் ஈடுபட்டனா். அப்போது, பேச்சு வாா்த்தை நடத்திய குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் 30 நாட்களில் மாற்றித் தருவதாக எழுத்து மூலம் உறுதி அளித்தாா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துச் சென்றனா்.

பேச்சு வாா்த்தை...

இதுதொடா்பான அமைதிப் பேச்சு வாா்த்தை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சுமித்ரா, கடலூா் டாஸ்மாக் மேலாளா் கந்தன் மற்றும் அப்பகுதிபொதுமக்கள் கலந்துகொண்டனா். இதில் உடன்பாடுகள் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 12 மணி அளவில் அப்பகுதியை சோ்ந்த மக்கள் டாஸ்மாக் கடை முன்பு கூடி, கடையை திறக்க விடாமல் கண்டன கோஷங்களை எழுப்பி தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் சுமித்ரா மற்றும் கடலூா் டாஸ்மாக் மேலாளா் கந்தன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.