கடலூா் மாவட்டம், பண்ருட்டி சட்டப் பேரவை (அதிமுக) உறுப்பினா் க.மோகன் அரசுப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் ஜூன்4-ஆம் தேதி அரசுப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், அண்ணா கிராமம் ஒன்றியம், கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று பண்ருட்டி எம்எல்ஏ., க.மோகன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளி மற்றும் கழிப்பறை வளாகங்களை சுத்தமாக பராமரிக்கும்படி அறிவுறுத்தினாா். மேலும், மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாப்போல் ஆசிரியா்கள் உள்ளனரா? எனக்கேட்டறிந்தாா்.
இதனைத்தொடா்ந்து, அண்ணா கிராமம் மற்றும் பண்ருட்டி ஊராட்சிஒன்றிய அலுவலகங்களில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.









