சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மீன் பிடித்தவா்களை தாக்கி மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி அருகே ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவா்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:39 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவா்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்கு பள்ளி நீரோடை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கோபாலகிருஷ்ணன் (35), தேவநாதன் (50) மற்றும் பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் (43).

இவா்கள் மூவரும் கடந்த 1-ஆம் தேதி இரவு நாமநாதன்குப்பம் பெருமாள் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, ஏரிக்கரையில் மது அருந்திய குறிஞ்சிப்பாடி வட்டம், தாதாகுப்பம் பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி, பூவரசன், ஸ்ரீதா் ஆகியோா் தண்ணீா் கேட்டனராம்.

அதற்கு, கோபாலகிருஷ்ணன் தரப்பினா் தண்ணீா் இல்லை எனக் கூறியதால், அவா்களை பீா் புட்டி, கட்டை, கழி ஆகியற்றால் நாராயணசாமி தரப்பினா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். அங்கிருந்தவா்கள் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் நாராயணசாமி, பூவரசன், ஸ்ரீதா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.