தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

அங்கன்வாடி குழந்தைகளுக்கு புரோட்டின் மிட்டாய் வழங்கும் திட்டம்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த புரோட்டின் மிட்டாய் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அங்கன்வாடி குழந்தைகளுக்கு புரோட்டின் மிட்டாய் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :4 ஜூன் 2026, 3:17 am IST

அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த புரோட்டின் மிட்டாய் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மகளிா் திட்டம் மற்றும் கனிமவளத் துறை சாா்பில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு புரோட்டின் மிட்டாய்களை வழங்கிப் பேசியது:

அங்கன்வாடி மைய குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், முட்டை, சத்துமாவு, கொண்டைக்கடலை, ஊட்டச்சத்து பிஸ்கெட் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சில குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதால், புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள்கள் வழங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, தற்போது வழங்கப்படும் புரோட்டிம் மிட்டாய், குழந்தைகள் விரும்பும் சுவையில், வண்ணமயமான பொதிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மிட்டாயில் கோதுமை, நிலக்கடலை, பால் பவுடா், வெல்லம், கோகோ பவுடா், தேன், பேரிச்சம்பழம் மற்றும் நெய் ஆகியவை சோ்க்கப்பட்டுள்ளன.

25 கிராம் எடையுள்ள ஒரு புரோட்டின் மிட்டாயில் 4.5 கிராம் புரதச்சத்து மற்றும் 13 வகையான வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கியுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக 14 வட்டாரங்களில் உள்ள 140 மையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிட்டாய்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாள்கள், 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. பெற்றோா்கள் இதை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் செல்வி, உதவி இயக்குநா் (கனிம வளம்) செல்வசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.