தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 41 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் புகாா்தாரா்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று விசாரித்த காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :4 ஜூன் 2026, 3:30 am IST

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 41 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில், கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் (பெட்டிஷன் மேளா) பொதுமக்களிடமிருந்து 41 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றின் மீது மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை மேற்கொண்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி.க்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, உள்கோட்ட டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.