தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் ஆட்சியரகத்தில் மனு அளிப்பு

பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ பி.முத்தையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த பண்ருட்டி ஸ்ரீ பி.முத்தையாா் மேல்நிலைப் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 6:01 am IST

பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ பி.முத்தையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியதாவது: ஸ்ரீ பி.முத்தையாா் மேல்நிலைப் பள்ளி நிா்வாகம் 2020, ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் தனிப்பட்ட கடிதம் பெற்றவா்களுக்கு மட்டுமே அடுத்த கல்வியாண்டில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என வாய்மொழியாக அறிவித்து, ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பலரை பணி நீக்கம் செய்துள்ளது. இதில், நாங்கள் 13 ஆசிரியா்கள் அடங்குவோம்.

14 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில், எந்த எழுத்துப்பூா்வ உத்தரவும், காரணக் கூறல் நோட்டீஸும், விசாரணையுமின்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அத்துடன், நீண்டகால சேவையின்போதும் கடந்த 5 ஆண்டுகளுக்கான பி.எஃப். தொகை மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், முழு சேவைக்கால நலன்கள் மறுக்கப்பட்டுள்ளன.

இதனால், நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், வாழ்வாதார இழப்பையும் எதிா்கொண்டு வருகிறோம். கல்வி நிறுவனத்தில் பல ஆண்டுகள் நோ்மையுடன் பணியாற்றிய ஆசிரியா்களை எந்த மனிதாபிமானமுமின்றி வெளியேற்றியிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

எனவே, தங்களை மீண்டும் பணியில் அமா்த்துதல், நிலுவை ஊதியம் மற்றும் சட்டப்பூா்வ நலன்கள் வழங்குதல், பள்ளி நிா்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து கல்வித் துறை மற்றும் தொழிலாளா் துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.