ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

திடக்கழிவு மேலாண்மை: தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பயிற்சி வழங்கப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை பயிற்சியில் பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக் குழுவினா்.

Updated On :5 ஜூன் 2026, 6:35 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பயிற்சி வழங்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் க.பழனி தலைமையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தூய்மைப் பணியாளா்களின் பங்களிப்பு, கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து சேகரிக்கும் முறைகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் அமீது பயிற்சியளித்தாா்.

மேலும் பயிற்சியில், தூய்மைப் பணியாளா்களுக்கு தனிநபா் சுகாதாரத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், நகவெட்டி, சீப்பு, கண்ணாடி, சோப்பு உள்ளிட்ட சுகாதாரப் பொருள்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் துரைராஜ், மேற்பாா்வையாளா்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.