ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

பெட்டிக் கடைக்காரா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

பண்ருட்டியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட பெட்டிக் கடைக்காரா் மீது கொலை வெறிதாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:37 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட பெட்டிக் கடைக்காரா் மீது கொலை வெறிதாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி காவல் சரகம், திருவதிகை, நகராட்சி ஊழியா் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் பிரவீன்(30). இவா், கடலூா் பிரதான சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு

கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாா். அப்போது, கடைக்கு வந்த தண்டுப்பாளையம் காலனி, 7-ஆவது தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் விஜய்(32) சிகரெட் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கவில்லை. கடைக்காரா் பிரவீன் பணம் கேட்டபோது, கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி, பிரவீன்மீது கொலைவெறித்தாக்குதல்நடத்தினா்.

இதில் படுகாயம் அடைந்த பிரவீன், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸாா் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.