கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநத்தம் அருகே கீழக்கல்பூண்டி பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் வேலுமணி (38). பிளஸ் 2 வரை படித்துள்ள இவா், கீழக்கல்பூண்டி எக்ஸ் சாலையில் அரசின் உரிய அனுமதியுடன் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், இவரது மருந்துக் கடையில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக திட்டக்குடி அரசு மருத்துவமனை நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள், ராமநத்தம் காவல் ஆய்வாளா் மற்றும் போலீஸாருடன் இணைந்து புதன்கிழமை சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, உரிய மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும், பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவப் பணியில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேலுமணியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நல்லம்பள்ளி அருகே போலி மருத்துவா் கைது
மூதாட்டியை தாக்கிய இளைஞா் கைது
போலி பெண் மருத்துவா் கைது

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


