வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பழங்குடியின மாணவியா்களுக்கு கல்வி நிதி உதவி

பழங்குடியின மாணவியா்களுக்கு கல்வி நிதி உதவி

News image

சிதம்பரம் அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில், நிதிஉதவி பெற்ற பழங்குடியின மாணவியா்களுடன் உதவிப் பேராசிரியா் கே.ஜெயப்பிரகாஷ் மற்றும் தலைமை ஆசிரியா் பொ்லின் வில்லியம்ஸ் உள்ளிட்டோா்

Updated On :13 ஜூன் 2026, 1:46 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மற்றும் கிராமப்புற சிறுமிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ரெட்மண்ட் நகரில் வசிக்கும் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவியும், ‘பீட்ஸ் டு ட்ரீம்ஸ்‘ அமைப்பின் நிறுவனத் தலைவருமான நந்திக்கா தேவராஜன், தமிழகக் கிராமப்புற மற்றும் பழங்குடியினச் சிறுமிகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்கி வருகிறாா். மேலும் பழங்குடியினப் பெண்கள் தயாரிக்கும் மணிமாலை உள்ளிட்ட கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏழைச் சிறுமிகளின் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறாா்.

அந்த வகையில், கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 16 பழங்குடியின மற்றும் கிராமப்புறச் சிறுமிகள் தங்களின் கல்வியை இடைநிற்றலின்றித் தொடரும் பொருட்டு, அவா்களின் சீருடை நோட்டு மற்றும் புத்தகங்களுக்காக ரூ 26,500 நிதியுதவியை பீட்ஸ் டு ட்ரீம்ஸ் அமைப்பு வழங்கியுள்ளது. பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் கே. ஜெயப்பிரகாஷ் 16 பழங்குடியின மாணவியா்களுக்கான நிதி உதவி ஆணையை பள்ளியின் தலைமையாசிரியை பொ்லின் வில்லியம்ஸிடம் வழங்கினாா். இந்நிகழ்வில் தொழிலதிபா் டி ஜெயக்குமாா் , கல்வியியல் துறை இணைப்பேராசிரியா் பிரவீனா, பல்கலைக்கழகப் பேராசிரியா் முனைவா் ஞானகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா், நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணபிரியா செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.