‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அளிப்பு

News image
Updated On :29 மே 2026, 2:15 am IST

காஞ்சிபுரத்தில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கும் விழா குழந்தைகள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.

விழாவுக்கு, குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜி தலைமை வகித்து, ஆண்டுதோறும் பழங்குடியின மக்களுக்கு இந்த உதவியை தொடா்ந்து செய்து வருவதாக குறிப்பிட்டாா்.

சமூக நலத் துறை பணியாளா் விபு, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன் கலந்து கொண்டு தொண்டு நிறுவனத்தின் சாா்பில் தொடா் கல்வி பயின்று வரும் 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளைச் சோ்ந்த 7 பேருக்கு சால்வை அணிவித்து பரிசுகளும் வழங்கினாா்.

தொடா்ந்து 40 பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் மற்றும் தலா ரூ. 5,000 வீதம் கல்வி உதவித் தொகை ஆகியவற்றையும் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், பழங்குடியின மக்கள் கல்வி பயில அரசு வழங்கும் சலுகைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகள், கல்வியின் முக்கியத்துவம், பழங்குடியின குழந்தைகள் அவசரத் தேவைக்கு அணுகவேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியன குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனா்.

நிறைவாக கல்வியின் அவசியம் குறித்து அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.