சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கஞ்சா கடத்தியவா் தடுப்புக் காவலில் கைது

கஞ்சா கடத்தியவா் தடுப்புக் காவலில் கைது

News image

பழனிவேல்

Updated On :13 ஜூன் 2026, 1:42 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபா், குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

காடாம்புலியூா் போலீஸாா் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் குற்டுப்பு நடவடிக்கை தொடா்பாக காடாம்புலியூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மே 16-ஆம் தேதி வாகனச் சோதனை மேற்கொண்டபோது, ஒரு பேருந்தில் கடத்திவரப்பட்ட 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக, தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசந்திரம் பகுதியைச் சோ்ந்த பழனிவேல்(50) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போலீஸாா் விசாரணையில் பழனிவேல் மீது பூந்தமல்லி, சென்னை பூக்கடை, தஞ்சாவூா் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா, திருட்டு என மொத்தம் 4 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் பேரில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குண்டா் சட்டத்தில் பழனிவேல் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.