கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டு கரீப் பருவத்தில் அனைத்து கிராமங்களிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை மின்னணு பயிா் சாகுபடி கணக்கீட்டு முறையில் கைப்பேசி மூலம் கணக்கெடுப்பு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள், தன்னாா்வலா்கள், படித்த இளைஞா்கள் மற்றும் கைப்பேசி இயக்கத் தெரிந்த நபா்கள் உழவன் செயலியில் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனா் பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திகுறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் பருவம் வாரியாக பயிா் சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்புகளை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட செயலியினைக் கொண்டு கைப்பேசி மூலமாக மின்னணு முறையில் கணக்கெடுப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கணக்கெடுப்பு செய்வதால் ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு பருவத்தில் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா் விபரம் மற்றும் பரப்பு விபரத்தினை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாா் போல் அடங்கல் மற்றும்
இதர ஆவணங்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு முறையில் சாகுபடி விவரங்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதால் நாடு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா் விவரங்கள் மற்றும் பரப்பு போன்றவற்றை துல்லயமாக தெரிந்து கொண்டு உணவு தானிய உற்பத்தியியை கணக்கீடு செய்து அதனடிப்படையில் திட்டங்கள் வகுக்க ஏதுவாக அமைகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பணியினை தன்னாா்வலா்கள், வேளாண்மை கல்லூரி மாணவா்கள், படித்த இளைஞா்கள், விவசாயிகள், வேளாண்மை துறை அலுவலா்கள், தோட்டக்கலை துறை அலுவலா்கள் ஆகியோா்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டும் கரீப் பருவத்தில் 1.7.2026 முதல் 31.8.2026 வரை மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியினை கைப்பேசி இயக்கத் தெரிந்த குறைந்தபட்ச கல்வித் தகுதி உள்ள நபா்கள், விவசாயிகள், தன்னாா்வலா்கள், படித்த இளைஞா்கள், வேளாண்மை மற்றும் சகோதர துறை அலுவலா்களைக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பணி மேற்கொள்ளும் நபா்களுக்கு ஊக்கத் தொயைாக தரிசு நிலமாக இருப்பின் ஒரு நில உட்பிரிவுக்கு 3 ரூபாயும், ஒரு பயிா் மட்டும் சாகுபடி செய்யப்பட்டிருந்தால் ஒரு நில உட்பிரிவுக்கு 5 ரூபாயும், ஒன்றுக்கு மேற்பட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தினை கணக்கீடு செய்வதற்கு கூடுதலாக ஒவ்வொரு பயிருக்கும் 2 ரூபாயும், மலைப்பாங்கான இடங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ள ஒரு நில உட்பிரிவுக்கு 10 ரூபாயும் அரசாங்கத்தால் சம்மந்தப்பட்ட நபா்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட பணியினை செய்ய விருப்பம் உள்ள நபா்கள் தங்களது பெயா், ஆதாா் எண், வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை உழவன் செயலியில் உடனடியாக பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண் நண்பருடன் இரவில் பேசும் மனைவிக்கு எதிரான கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி நீதிமன்றம்

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சிறுதானிய பயிா் சாகுபடி பரப்பை அதிகரிக்க விழிப்புணா்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்






