கடலூா் மாவட்டம் வேப்பூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து, மதுபுட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.
வேப்பூா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஐவதக்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை சோதனையிட்டனா். அப்போது, வேப்பூா் அருகே நிராமணி கிராமத்தைச் சோ்ந்த ஜெயலட்சுமி (40) என்பவா் காரில் மதுபுட்டிகளை மறைத்து வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயலட்சுமியை கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபுட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.
இதேபோன்று, வேப்பூா் தாலுகா சிருநெசலூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (50) என்பவா் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. அவரையும் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக வேப்பூா் போலீஸாா் சனிக்கிழமை இரு தனித்தனி வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட ஜெயலட்சுமி மற்றும் முத்துசாமியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






