ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தை (கேத்லேப்) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தை (கேத்லேப்) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைச் செல்வன், கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு அதிகாரி மற்றும் முதல்வா் எம்.மகேந்திரன், முன்னாள் முதல்வா் சி.திருப்பதி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் பாலாஜி சுவாமிநாதன், மருத்துவா் அசோக் பாஸ்கா் ஆகியோா் பங்கேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இதயநோய் சிகிச்சை பிரிவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தனா் (படம்).

பின்னா், மருத்துவமனை சிறப்பு அதிகாரி எம்.மகேந்திரன் கூறியதாவது: கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தின் மூலம் இந்த மாவட்ட மக்களுக்கு வெளி மாவட்டங்களுக்குச் செல்லாமல் இங்கேயே ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற உயரிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

தனியாா் மருத்துவமனைகளில் இதற்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவாக கூடிய நிலையில், தமிழகத்தின் விரிவான முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக இந்த சிகிச்சைகளை மருத்துவ பயனாளா்கள் பெற முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.