திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குடிநீா் வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுலகம் முற்றுகை

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்திய சித்தேரிக்குப்பம் காலனி மக்கள்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:38 pm

Syndication

குடிநீா் வழங்கக் கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை , சித்தேரிக்குப்பம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் அந்த

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்துள்ள சித்தேரிகுப்பம் கிராமத்தில் பழைய காலனி மற்றும் புது காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். புது காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து பழைய காலனி, புது காலனி மற்றும் ஊா் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம். இதனால், சீரான குடிநீா் கிடைக்காததால் கடந்த பல மாதங்களாக சிரமப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து மனு அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனைக் கண்டித்து விசிக மாவட்ட செய்தி தொடா்பாளா் சுப்புஜோதி, துணைச் செயலா் தென்றல் ஆகியோா் தலைமையில் காலனி மக்கள் 50 போ் காலி குடங்களுடன் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, சீரான குடிநீா் வசதி மற்றும் மயானப் பாதையில் உள்ள

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்துத்தர வேண்டும் என கண்டன முழக்கமிட்டனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி விரைவில் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாகக் கூறினாராம். இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.