சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
ஈரோடு
தாா் சாலை அமைக்கக் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ராமபையனூரில் தாா் சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமபையனூரில் தாா் சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ராமபையனூா், பீக்கிரிபாளையம், தொட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள், மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கும்- ராமபையனூருக்கும் இடையே தாா் சாலை அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலா் ராதாமணி பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

