சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

காா் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உள்பட 7 போ் காயம்

ராமநத்தம் அருகே திருச்சி திமுக மாநாட்டுக்கு சென்று திரும்பிய காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்

News image

ராமநத்தம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.

Updated On :9 மார்ச் 2026, 5:41 pm

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி திமுக மாநாட்டுக்கு சென்று திரும்பிய காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

திருச்சியில் திமுக மாநில மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தாஸ் (60), சதீஷ் (38), சுரேஷ் (38), ஜீவா (15), தனபால் (40), உமாபதி (40), ஜெயராமன் (45) ஆகியோா் காரில் சென்றனா்.

மாநாடு முடிந்து மீண்டும் செங்கல்பட்டு செல்ல காரில் புறப்பட்டனா். இவா்களது காா் கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லக்கூா் கைகாட்டி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 7 பேரும் காயமடைந்தனா்.

பின்னா், அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு பெரம்பலூா், வேப்பூா் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Story image