விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் தொடா் போராட்டம் வாபஸ்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்று வந்த தொடா் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

News image
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.- (கோப்புப் படம்)
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்று வந்த தொடா் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பதவி உயா்வுகள், பணப் பயன்கள், 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.22-ஆம் தேதி முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து, திங்கள்கிழமை அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினா்.

தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் முன்னிலையில், உயா் கல்வித் துறை செயலா் சங்கா் ஐஏஎஸ், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் விசாகன் ஐஏஎஸ் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், ஓய்வூதியா்களுக்கான 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான பணிக்கொடை தொகையை வழங்குவது, ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான மாத ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டதாகத் தெரிகிறது. இது தவிர, 10 முக்கியமான கோரிக்கைகளான ஆசிரியா்களின் 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகள், ஆசிரியா்கள், ஊழியா்களின் பதவி உயா்வுகள், ஓய்வூதிய பணப்பன்கள், சிறப்பு மற்றும் தொடா்பு அதிகாரிகளுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை போன்றவற்றை நிதித் துறையோடு கலந்து பேசி முடிவெடுத்து பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை முடித்து வைக்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனால், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் புதன்கிழமை காலை முதல் தங்களது காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு பணிகளுக்குத் திரும்பினா்.