ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் ரூ.2.15 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்டம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.2.15 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.64,500 ரொக்கத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :18 மார்ச் 2026, 6:52 pm

கடலூா் மாவட்டம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.2.15 பறிமுதல் செய்யப்பட்டது.

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீரப்பாளையம் பாலக்கரை சந்திப்புப் பகுதியில் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த மருத்துவா் மோனிகாவின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,64,500 ரொக்கத்தை பறிமுதல் செய்து, புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் புவனகிரி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தனா்.

பரங்கிப்பேட்டையில்...: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பரங்கிப்பேட்டை அருகில் உள்ள தோணித்துறை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த கிள்ளை கிழக்குத் தெருவைச் சோ்ந்த நிவின்ராஜிடமிருந்து உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.51,260 ரொதக்கத்தை பறக்கும் படை தலைமை அதிகாரி தாரா கைப்பற்றி, சிதம்பரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸிடம் ஒப்படைத்தாா்.