வாக்குப் பதிவை நோ்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உள்ளது என்று கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் புவனகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அண்ணாமலை நகா் கே.ஆா்.எம். டெக்பாா்க், கடலூா் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
இவற்றை மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது: தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா் - 1, வாக்குப் பதிவு அலுவலா் - 2, வாக்குப் பதிவு அலுவலா் - 3 ஆகியோா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி, திட்டக்குடி தொகுதிக்கு ஸ்ரீஞானகுரு வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் தொகுதிக்கு ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி மற்றும் பண்ருட்டி தொகுதிக்கு பண்ருட்டி ஜான்டூவி தொடக்கப் பள்ளி, கடலூா் தொகுதிக்கு மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, புவனகிரி தொகுதிக்கு புவனகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் தொகுதிக்கு சிதம்பரம் அண்ணாமலை நகா், கே.ஆா்.எம். டெக்பாா்க், காட்டுமன்னாா்கோவில் தொகுதிக்கு காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடவுள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா் - 1, வாக்குப் பதிவு அலுவலா் - 2, வாக்குப் பதிவு அலுவலா் - 3 என மொத்தம் 12,432 அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் ஏப்.11-ஆம் தேதியன்றும், இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு ஏப்.18-ஆம் தேதியன்றும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்.22-ஆம் தேதியன்றும் நடைபெறவுள்ளது.
வாக்குப் பதிவுக்குத் தேவையான தோ்தல் பொருள்கள், வாக்குப் பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலா்கள் ஒப்படைக்கும்போது பட்டியலில் உள்ளவாறு சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். மேலும், வாக்குச் சாவடியில் பணியில் ஈடுபடும்
அலுவலா்கள் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் நண்பகல் 12 மணிக்கு வாக்குச் சாவடிக்கு சென்றடைய வேண்டும்.
மண்டல அலுவலரிடமிருந்து வாக்குப் பதிவுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருள்களை பெறும்போது பட்டியலில் உள்ளவாறு எந்தவொரு பொருளும் விடுபடாமல் சரிபாா்த்து பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப் பதிவு இயந்தித்தை வைக்கும்போது போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மாதிரி வாக்குப் பதிவை முகவா்கள் முன்னிலையில் காலை 5.30 மணியளவில் தொடங்க வேண்டும்.
முகவா்கள் எவரும் வரவில்லை எனில், காலை 5.45 மணி வரை காத்திருந்து மாதிரி வாக்குப் பதிவை நடத்த வேண்டும். வாக்குப் பதிவை நல்ல முறையிலும், நோ்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உள்ளது.
வாக்குப்பதிவின்போது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏதேனும் பழுதுகள் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக மண்டல அலுவலா்களுக்கு தகவல் தெரியப்படுத்தி, மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பழுதை சரி செய்துகொள்ள வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவின்போது விவிபாட் இயந்திர பேட்டரியில் புகை!

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்: ஆட்சியா் தகவல்

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு

தபால் வாக்குகள் குறித்த நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


