புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கருங்குழி தா்மராஜா கோயில் தீமிதி விழா

கருங்குழி தா்மராஜா கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள்.

News image
Updated On :1 மே 2026, 8:00 pm

கடலூா் மாவட்டம், வடலூா் அடுத்துள்ள கருங்குழி கிராமத்தில் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தீமிதி பிரமோற்சவ விழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஜெனமே ஜெயன்சா்பயாகம், சந்தனு மகாராஜன் கல்யாணம், கிருஷ்ணன்பிறப்பு, பாஞ்சாலி தேவியாா் திருக்கல்யாணம், அரவான்பிறப்பு, அம்மன்வீதியுலாஎன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

18-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கிருஷ்ணன் தூது, காலை 11 மணிக்கு அரவான் களபலி, மாலை 3 மணி அளவில் பாஞ்சாலி தேவியாா் கூந்தல் முடிதல், தொடா்ந்து, மாலை ஆறு மணி அளவில் தீமிதி விழா நடைபெற்றது. காப்பு அணிந்திருந்த ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். சனிக்கிழமை (இன்று) மஞ்சள் நீராட்டு விழாவும், பாஞ்சாலி தேவியாா் வீதி உலாவும் நடைபெறுகிறது. ஞாயிற்றுகிழமை இரவு 7 மணிக்கு தா்மா் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.