கடலூா் அருகே பிரசித்திபெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் சிதித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனா்.
கடலூா் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயில் 108 வைணவ
தலங்களில் முதன்மை பெற்ாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகா் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தேவநாத சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாழி வாகனம், அனுமன் வாகனம், ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனம் ஆகிய வாகனங்களிலும், தங்க பல்லக்கிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கருட மகா உற்சவத்தன்று கருட வாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தேரோட்டத்தைமுன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொடர்புடையது

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

சாா்தாம் யாத்திரை: கேதாா்நாத் கோயில் நடைதிறப்பு- திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


