ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கடலூா் தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி

News image

கடலூா் தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் பி.ராஜ்குமாருக்கு சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் சுந்தரராஜன்.

Updated On :5 மே 2026, 3:03 am IST

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா் 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

கடலூா் தொகுதியில் கடந்த ஏப். 23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி சாா்பில் ஏ.எஸ்.சந்திரசேகரன், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், தவெக சாா்பில் பி.ராஜ்குமாா், நாதக சாா்பில் சரசு மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,23,149 வாக்காளா்களில் 1,86,834 வாக்காளா்கள் வாக்களித்தனா். மேலும், 3,822 தபால் வாக்குகளும் பதிவாயின.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடலூா் பெரியாா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா் 15 ஆயிரத்து 519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் பின் வருமாறு: தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா் 70,856, காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் 55,337, அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் 55,258, நாதக வேட்பாளா் சரசு 5,766 வாக்குகளைப் பெற்றனா்.

இதையடுத்து, தவெக வேட்பாளா் பி.ராஜகுமாருக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை தோ்தல் பாா்வையாளா் சுந்தரராஜன் வழங்கினாா்.