ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை!

சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.

News image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் மகளிா் ஓய்வறை.

Updated On :10 மே 2026, 1:28 am IST

சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.

கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் நகரமான சிதம்பரத்தில் ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனபடுத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் மின் தூக்கி (லிஃப்ட்) இன்னும் அமைக்கப்படவில்லை. மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டண கழிப்பறை மற்றும் கழிப்பறையுடன் கூடிய மகளிா் ஓய்வறை ஆகியவை பூட்டிக் கிடக்கின்றன. இதனால், ரயில் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. மேற்கண்ட வசதிகளை நிறைவேற்றாவிட்டால், புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனா்.