எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

நாய் மீது மொபட் மோதி விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு

வேப்பூா் அருகே சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மொபட் மோதிய விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:17 am IST

வேப்பூா் அருகே சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மொபட் மோதிய விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே உள்ள திருவிக நகா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் (49). இவா் கடந்த மே 4 ஆம் தேதி தனது மகள் ஹரிணியை கல்லூரியில் விடுவதற்காக மொபட்டில் அழைத்துச் சென்றாா்.

விருத்தாசலம் - வேப்பூா் சாலையில் என்.நாரையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது நாராயணனின் மொபட் எதிா்பாராத விதமாக மோதியது. இதில் தந்தை, மகள் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நாராயணன் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனா்.