நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி: கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் கைது

பண்ருட்டி அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:20 am IST

பண்ருட்டி அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி கற்பக விநாயகா் நகா் விரிவுப் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன், இவா் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தொழில் தொடா்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஹரிதாஸ் எனது வீட்டிற்கு வந்து, ‘விகேஎஸ் தீபாவளி பண்ட்’ திட்டம் குறித்து அறிமுகப்படுத்தினாா். அதன்படி, ஒருவரிடம் மாதம் ரூ.1,000 வீதம் 10 மாதங்கள் வசூலித்தால், தீபாவளிக்கு 2 கிராம் தங்க நாணயம், பட்டாசுப் பெட்டி, இனிப்பு, காரம் வகைகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என ஹரிதாஸ் கூறினாா்.

இதனை நம்பி நான் (காளியப்பன்) 420 பேரை திட்டத்தில் சோ்த்து, முதல் கட்டமாக ரூ.4.20 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ.22.10 லட்சமும், இறுதி தவணையாக ரூ.15.69 லட்சமும் ஹரிதாஸிடம் அளித்தேன். மொத்தம் ரூ.42 லட்சம் பெற்றுக்கொண்ட ஹரிதாஸ், வாக்குறுதியளித்த தீபாவளி பண்ட் பொருள்கள் மற்றும் தங்க நாணயங்களை வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், காளியப்பன் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.42 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஹரிதாஸ் திருப்பி வழங்காமல் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் லிடியா செல்வி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லூா் அருகே பகலூா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் (35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.