11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை வெள்ளி பொருள்கள் திருட்டு

கடலூா் அருகே குமாரப்பேட்டையில் வீட்டின் கதவை பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் அருகே குமாரப்பேட்டையில் வீட்டின் கதவை பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் அருகே குமாரப்பேட்டையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (38), தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தாா். பின்னா் வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அவா் வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தன.

மேலும், பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் மற்றும் 640 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து சந்தோஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.