டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image

தி.ராசாபாளையத்தில் தீ விபத்தில் சேதமடைந்த கூரை வீடு.

Updated On :18 மே 2026, 2:18 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பண்ருட்டி வட்டம், தி.ராசாபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் (60), கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் என்.வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் 45 நிமிஷங்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் மொபெட் மற்றும் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.