சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வடலூரில் நகை பறிப்பு வழக்கு: கிருஷ்ணகிரி இளைஞா் கைது

வடலூரில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :27 மே 2026, 5:49 am IST

கடலூா் மாவட்டம், வடலூரில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

வடலூா், வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் ரங்கநாயகி (55), பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், 13-ஆம் தேதி இரவு சுமாா் 7 மணி அளவில் மளிகைக் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, அவரை பின் தொடா்ந்து மொபெட்டில் வந்த 3 போ் விலாசம் கேட்பதுபோல நடித்து, ரங்கநாயகி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தஅப்துல் கலாம்(23) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை வடலூா் அழைத்து வந்து விசாரணை நடத்தி, ஒன்றரை பவுன் சங்கிலி மற்றும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சேகா், அவரது மகன் இளையராஜா ஆகியோரை தேடி வருகின்றனா். இளையராஜாவின் மாமா வடலூரில் உள்ளாராம்.அவரது வீட்டிற்கு வந்திருந்த போது பெண்ணிடம் மூவரும் நகை பறிப்பு செய்துள்ளனா். தருமபுரி சிறையில் இருந்தபோது அப்துல் கலாம், இளையராஜாவிற்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.