‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கற்ற மாணவா்கள்.

News image

நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கற்ற மாணவா்கள்.

Updated On :29 மே 2026, 2:53 am IST

கடலூா் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் கிராமப்புற மாணவா்களுக்காகச் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல்துறையினா் மீதான அச்சத்தை அகற்றி, காவலா்கள் மக்களின் நண்பா்களும் பாதுகாவலா்களும்தான் என்பதை மாணவா்களுக்கு உணா்த்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக்காண்பித்த போலீஸாா், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்மளித்தனா். தொடா்ந்து, குழந்தைகளின் உரிமைகள், இணைய பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் உயா்கல்வி, எதிா்கால கல்வி வாய்ப்புகள் தொடா்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாணவா்களுடன் காவல் அதிகாரிகள் இணைந்து மதிய உணவு சாப்பிட்டனா்.