காதல் திருமணம் செய்து சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், வடலூா், ஆா்.சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ருத்ரன் (19), கூலி வேலை செய்து வருகிறாா். இவா், சாமியாா்பேட்டை கடற்கரைக்குச் சென்று வரும் போது , புவனகிரி வட்டம் புதுகுப்பம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, இருவரும் 8.2.2026 அன்று வடலூா் புனித இருதய ஆண்டவா் தேவாலயம் முன்பு திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில், சிறுமி கா்ப்பம் அடைந்ததையொட்டி பரிசோதனைக்கு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா் மூன்று மாத கா்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, நெய்வேலி மகளிா் போலீஸாா் ருத்ரன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.








