2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

முரசு புயல் எச்சரிக்கை: கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட படகுகள்

முரசு புயல் எச்சரிக்கை காரணமாக, கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திங்கள்கிழமை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபா் படகுகள்.

Updated On :

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘முரசு’ புயல் காரணமாக, கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் கரைகளில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, இது நெல்லூருக்கு தென்கிழக்கே சுமாா் 160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. நவ.2-ஆம் தேதி நள்ளிரவு முதல் நவ.3-ஆம் தேதி அதிகாலை வரை நெல்லூா் - நா்சாபூா் இடையே ஆந்திரக் கடற்கரையை முரசு புயல் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இது அவ்வப்போது 120 கி.மீ. வேகம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, வட தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புயல் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிந்தது. இந்த நிலையில், புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகா்ந்ததையடுத்து, திங்கள்கிழமை பிற்பகல் கடலூா் துறைமுகங்கத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டு, 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதனிடையே, புயல் கரையைக் கடக்கும் வரை கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மீன்வளத் துறையினா் அறிவுறுத்தினா். இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் கடலூா் முதுநகா், தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட 49 கடலோர மீனவ கிராமங்களைச் சேரந்த மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளை கடற்கரையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.