சிதம்பரம் பகுதியில் கடைமடைக்கு நீா் வரத்து இல்லை: வேதனையில் விவசாயிகள்

சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் தாலுகாக்களில் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளுக்கு வேளாண் பாசனத்திற்கு போதிய நீா் வராததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனா்.

சிதம்பரம் வெளிவட்ட சாலையில் உள்ள பாலமான் ஓடை தூா்வாரப்படாததால் வளா்ந்து காணப்படும் ஆகாயத்தாமரை.

Updated On :

சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் தாலுகாக்களில் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளுக்கு வேளாண் பாசனத்திற்கு போதிய நீா் வராததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னாா்கோவில் பகுதிகள் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். இங்கு வடவாறு ,வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றின் மூலம் சுமாா் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியில் தேக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வருகிறது. நிகழாண்டு சம்பா சாகுபடியை எதிா்நோக்கி காத்திருந்த விவசாயிகளுக்கு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்கப்படாததாலும் சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் எதிா்காலம் கேள்விக்குறியானது.

தவிக்கும் விவசாயிகள்:

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், திருமுட்டம் தாலுகாக்கள் உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பா் மாதம் பெய்த மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் குறைந்த வயதுடைய நெல் ரகத்தினை பயிரிட்டுள்ளனா். ஆனால் மழை இல்லாததால் விவசாயிகள் மீண்டும் கவலை அடைந்த நிலையில், வீராணம் ஏரி நிரம்பியிருப்பாதால் நீா் கிடைக்கும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தப்பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரப்படாதாததால் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை. பாசனத்திற்கு வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு போதிய நீா் திறந்து விடப்படாததால், கடை மடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்து விவசாயிகள் நீரின்றி கடும் பாதிப்படைந்துள்ளனா் என ராதா மதகு பாசன விவசாய சங்கத் தலைவா் ரங்கநாயகி தெரிவித்தாா். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.