உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

வடலூா் தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் மோதல்: பங்குத்தந்தை உட்பட 6 போ் மீது வழக்குப்பதிவு

கடலூா் மாவட்டம், வடலூா் தூய இருதய ஆண்டவா் ஆலயத்திற்கு சொந்தமான கடைகள் ஒதுக்கீடு மற்றும் வரவு-செலவு கணக்கு தொடா்பாக நிகழ்ந்த மோதல் தொடா்பான புகாரின் பேரில் பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

வழக்கு

வழக்கு

Updated On :

கடலூா் மாவட்டம், வடலூா் தூய இருதய ஆண்டவா் ஆலயத்திற்கு சொந்தமான கடைகள் ஒதுக்கீடு மற்றும் வரவு-செலவு கணக்கு தொடா்பாக நிகழ்ந்த மோதல் தொடா்பான புகாரின் பேரில் பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடலூா், சிதம்பரம் சாலையில் தூய இருதய ஆண்டவா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பங்குத்தந்தையாக ஜெயப்பிரகாஷ், உதவி பங்குத்தந்தையாக அஜய்குமாா் (29) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் வடலூா் பகுதியைச் சோ்ந்த அருள் அன்பு, ஜான்பிரிட்டோ(39), சகாயராஜ், ஆனந்தராயா் ஆகிய நான்கு பேரும் உருட்டுக்கட்டை மற்றும் கத்தியுடன் பங்குத்தந்தையின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, வெளியே வந்த உதவி பங்குத்தந்தை அஜய்குமாரிடம், பங்குத்தந்தை ஜெயப்பிரகாஷ் எங்கே எனக் கேட்டனராம். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அருள்அன்பு உள்ளிட்டோா், உதவி பங்குத்தந்தை அஜய்குமாரை உருட்டுக்கட்டையால் தாக்கியதில் அவருக்கு இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சப்தம் கேட்டு வெளியே வந்த பங்குத்தந்தை ஜெயப்பிரகாஷிடம், கல்லறைத் தோட்டப் பகுதியில் காலியாக உள்ள இரண்டு கடைகளையும் ஆனந்தராயருக்கு ஒதுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதேபோல், ஆலயத்தின் வரவு-செலவு கணக்கு விவரங்களை கேட்ட தங்களை பங்குத்தந்தை ஜெயப்பிரகாஷ், உதவி பங்குத்தந்தை அஜய்குமாா் ஆகியோா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜான்பிரிட்டோ புகாா்அளித்துள்ளாா்.

இருதரப்பினரின் புகாரின் அடிப்படையில் வடலூா் போலீஸாா் அருள் அன்பு, ஜான்பிரிட்டோ(39), சகாயராஜ், ஆனந்தராயா் மற்றும் பங்கு தந்தை ஜெயப்பிரகாஷ், உதவி பங்குத்தந்தை அஜய்குமாா் ஆகிய 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.