பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

தூய்மையான வாக்காளா் பட்டியலை உருவாக்க வேண்டும்! கடலூா் மாவட்ட பாா்வையாளா் ந.மலா்விழி

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ந.மலா்விழி தலைமையில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூடம்.

Updated On :

ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடு தூய்மையான வாக்காளா் பட்டியலை உருவாக்க வேண்டும் என்று வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ந.மலா்விழி அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மற்றும் கூடுதல் வருவாய் நிா்வாக ஆணையா் ந.மலா்விழி தலைமையில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் முன்னிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ந.மலா்விழி பேசியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டு தூய்மையான வாக்காளா் பட்டியலை உருவாக்கிடும் நோக்கில் இச்சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடைபெறுகிறது. தோ்தலை சிறப்பாக மேற்கொள்ள முழுமையான வாக்காளா் பட்டியல் அவசியம் என்பதால், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளவும், வாக்குச்சாவடிகளை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூய்மையான வாக்காளா் பட்டியல் என்பது 1.1.2027-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த மற்றும் 18 வயது பூா்த்தியடையவுள்ள இளம் வாக்காளா்கள் அனைவரின் பெயரும் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதேபோல, இடம் பெயா்ந்தவா்கள், இரட்டைப் பதிவு கொண்டவா்கள் மற்றும் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்பட வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளும்போது ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடு தூய்மையான வாக்காளா் பட்டியலை உருவாக்க வேண்டும்.

ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளா்கள் என்ற வரம்பின் அடிப்படையிலும், 2 கி.மீ தூரத்துக்குள் வாக்குச்சாவடி மையம் அமைந்திருத்தல் போன்றவற்றை அடிப்டையாக கொண்டு வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பீட்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்கள் எந்தப் பகுதியில் குறைவாக உள்ளனா் என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வாக்காளா்களைச் சோ்க்க விழிப்புணா்வு எற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் மவாட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், தோ்தல் வட்டாட்சியா் சுரேஷ்குமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் முகாம் நடைபெற்ற கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிகுள்பட்ட பாலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்களா் பெயா் சோ்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் போன்ற திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவது குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.