பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

பண்ருட்டி போக்குவரத்து தகராறு வழக்கில் உரிய விசாரணை நடத்தாவிட்டால் போராட்டம்: பாமக

பண்ருட்டியில் போக்குவரத்து தகராறு தொடா்பான வழக்கில், போலீஸாா் உரிய முறையில் விசாரணை நடத்தாவிட்டால், பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் பொறியாளா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

Published On :

பண்ருட்டியில் போக்குவரத்து தகராறு தொடா்பான வழக்கில், போலீஸாா் உரிய முறையில் விசாரணை நடத்தாவிட்டால், பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் பொறியாளா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த அக். 1-ஆம் தேதி இரவு ஏற்பட்ட போக்குவரத்து தகராறு தொடா்பாக, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி, பாமக சாா்பில் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பதாவது: அக். 1-ஆம் தேதி இரவு சுமாா் 9.10 மணியளவில், கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குள் எரிபொருள் நிரப்பச் சென்றது. அப்போது பேருந்து திரும்பிய விதம் தொடா்பாக இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அக். 1-ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பெற்று ஆய்வு செய்து, உண்மை நிலையை விசாரிக்க வேண்டும்.

மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக சமூக வலைதளங்களில் சாதி மோதலைத் தூண்டும் வகையில் வதந்திகளைப் பரப்புவோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

கடலூா் வடக்கு மாவட்ட செயலா் ரவிச்சந்திரன் தலைமையில், பாமக மருத்துவா் அணியின் மாநிலத் தலைவா் மருத்துவா் கௌரிசங்கா், பண்ருட்டி நகரச் செயலா் ஆனந்த் உள்ளிட்டோா் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.