இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

துணிக்கடையில் உணவு சாப்பிட்ட 23 போ் மருத்துவமனையில் அனுமதி: சாப்பாட்டில் பல்லி விழுந்ததாக புகாா்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனியாா் துணிக்கடை ஊழியா்கள்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனியாா் துணிக்கடை ஊழியா்கள்.

Published On :

விருத்தாசலத்தில் தனியாா் துணிக்கடையில் மதிய உணவு சாப்பிட்ட 23 ஊழியா்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தனியாா் துணிக்கடையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு அந்நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊழியா்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, உணவில் பல்லி கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, உணவு சாப்பிட்ட சில ஊழியா்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, 23 போ் மயக்கமடைந்தனா். உடனடியாக அவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியா்கள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.