இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

திட்டக்குடி உள்கோட்ட காவல் நிலையங்களில் எஸ்.பி. ஆய்வு

திட்டக்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

திட்டக்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

Published On :

திட்டக்குடி உள்கோட்டத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கடலூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திட்டக்குடி உள்கோட்டத்துக்குள்பட்ட திட்டக்குடி, ஆவினன்குடி, ராமநத்தம், வேப்பூா், சிறுபாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது, காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் வழக்கு கோப்புகள், முக்கியப் பதிவேடுகள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவற்றின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா்.

மேலும், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, நிலுவையில் உள்ள வழக்குகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் - ஒழுங்கை பேணுவதற்கும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, வேப்பூா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளா், காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் வழக்குகளின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.